கடும் வெயில்; புஷ்பவனேஸ்வரர் கோயில் வாசலில் கூலிங் பெயிண்ட்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2024 01:03
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக கோயில் வாசலில் " கூலிங் பெயிண்ட் " அடிக்கப்பட்டுள்ளது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் என திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. மறைந்த மூதாதையர்களுக்கு திருப்புவனம் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்கி விட்டு புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு செல்வது இந்துக்களின் வழக்கம். அமாவாசை உள்ளிட்ட தினங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைகை ஆற்றில் இருந்து கோயில் வரை சுமார் 100 மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நடந்து வந்து கோயிலுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதில் கோயில் வாசலில் இருந்து மொட்டை கோபுரம் வரை 120 அடி தூரத்திற்கும், கோவில் வாசலில் இருந்து அம்மன் சன்னதி வரை 35 அடி தூரத்திற்கும். நான்கு அடி அகலத்திற்கும் சிமெண்ட் சாலையில் பக்தர்களின் வசதிக்காக வெண்மை நிற " கூலிங் பெயிண்ட் " தேவஸ்தானம் சார்பில் அடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களின் பாதம் பாதுகாக்கப்படும். கூலிங் பெயிண்ட் அடித்திருப்பதால் எவ்வளவு வெயில் அடித்தாலும் தரையில் சூடு இருக்காது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.