தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலில் குதிரை வாகன சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2024 03:04
ஆழ்வார்திருநகரி; தென்திருப்பேரை பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நிகரில்முகில்வண்ணன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை நடைபெற்றது.
தென்திருப்பேரையில் நவதிருப்பதிகளில் 7வது ஸ்தலமான பெருமாள் கோயிலில் பங்குனித்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பெருமாள் தோளுக்கினியன், சிம்மம், அனுமார், சேஷம், யானை, இந்திர வாகனங்களில் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. 8ம் திருவிழாவான நேற்று குதிரைவாகன சேவை நடைபெற்றது. நேற்று காலையில் பல்லக்கில் வீதி உலாவும், மாலையில் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் எழுந்தருளி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரம் வரை திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திருக்கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் தொடர்ந்து நாளை காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், மறுநாள் 4ம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.