பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2024 01:04
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில் வெள்ளிக் காப்பு கவசத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.