மேட்டுப்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2024 03:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தேவி கருமாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுடன் துவங்கியது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் தேவி கருமாரியம்மன் சன்னதி உள்ளது. இக்கோவில் திருவிழா இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் பூச்சாட்டுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, அக்னி கம்பம் நடப்பட்டது. 9ம் தேதி பவானி ஆற்றில் இருந்து கரகம் எடுத்து, அன்னபூரணிபேட்டை வழியாக, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அழைத்து வர உள்ளனர். 10ம் தேதி மாவிளக்கு, அன்னதானம் நடைபெற உள்ளது. 12ம் தேதி சக்தி விநாயகருக்கு பூஜையும், திருசூலம் எடுத்து வருதலும், சிவபெருமான் அழைக்கும் நடைபெற உள்ளது. 15ம் தேதி கிரிமலைக்கு புறப்படுதலும், 16ம் பூண்டி அடிவாரத்தில் அபிஷேக பூஜை அன்னதானம் நடைபெற உள்ளது. வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.