வாடிப்பட்டி முத்துக்கருப்பணசாமி கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 04:04
வாடிப்பட்டி; வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டியில் முத்துக்கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் இன்று காலை கோவில் முன் கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜை செய்தனர். சுவாமி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. பொங்கல் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கொண்டையம்பட்டி மற்றும் லிங்கவாடி கோயில் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.