பரமக்குடி; பரமக்குடி காந்தகுளத்து முனியப்பசாமி, காளீஸ்வரி அம்மன் கோயில் 57 வது ஆண்டு பால்குட விழா நடந்தது. இதன்படி நேற்று காலை 7:00 மணிக்கு காட்டு பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, அக்னி சட்டி, வேல் குத்தி வந்தனர். ஓட்டப்பாலம், ஐந்து முனை, முதுகுளத்தூர் ரோடு செல்லும் வழியில் அருள் பாலிக்கும் முனியப்ப சாமி கோயிலை அடைந்தனர். அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில் முருகன், கணேசன், முனியராஜ், பூபதிநாகராஜன், தியாகராஜன், உமா மகேஸ்வரன், கார்த்திக்விஜய் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.