பயந்த சுபாவம் உள்ள தன் மகள் பெமினாவை நீச்சல் சொல்லிக் கொடுக்க ஆற்றிற்கு அழைத்துச் சென்றாள் அவளது தாய். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து பயந்து நின்றது. சிறிது நேரத்தில் ஆற்றில் நீந்தி அக்கரையை அடைந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் உனக்கு என்ன தெரிகிறது எனக் கேட்டாள். அம்மா நீயே சொல்லு என்றாள் பெமினா. ‘எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ள பயம் கூடாது. பயமிருந்தால் தாமதம் ஏற்படும் என மகளுக்கு நாயின் செயலைக் காட்டி பக்குவமாக எடுத்துச் சொன்னாள்’. அதைக் கேட்ட அவளும் நீச்சல் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் தயாரானாள்.