* நல்ல செயல் என்பது செய்பவருக்கு திருப்தியும், அனுபவிப்பவருக்கு நன்மையும் தரும். * மனத்துாய்மை, சரியான சொற்பிரயோகம், இவற்றை தக்க நேரத்தில் செயல்படுத்தும் விதம் நற்செயலுக்கு உயிர்நாடி. * நமக்கு துன்பம் தரும் ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார் எனக் கேள்விப்பட்டால் அதற்காக சந்தோஷப்படக் கூடாது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். * துன்பம் தந்தவருக்கு இந்த தண்டனை சரியானது தான் என நினைப்பது தவறு. அவரை பரலோகதேவன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவருக்கு உணர்த்துவது நல்லது.