வாழவந்த முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா; சக்தி கோஷத்துடன் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2024 05:04
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வாழவந்த முத்துமாரியம்மன் கோயில் 35 வது ஆண்டு பங்குனி திருவிழா நடந்தது. கோயிலில் மார்ச் 28 இரவு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏப்., 4 காலை 9:00 மணிக்கு பொங்கல் விழா நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆயிரம் கண் பானை, கரும்புத்தொட்டி எடுத்தல் மற்றும் பட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டார். ஏப்., 5 காலை அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று காலை 10:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சக்தி கோஷம் முழங்க அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.