திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 10:04
சிவகாசி; சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில், சக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.
சிவகாசி மாரியம்மன், திருத்தங்கல் மாரியம்மன், சக்தி மாரியம்மன் கோயில்களில் பொங்கல் திருவிழா மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிய உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். இந்நிலையில் நேற்று கோயில்களில் பொங்கல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களிலும் இன்று கயர் குத்து திருவிழாவும், நாளை சிவகாசியில் தேரோட்டமும், ஏப். 11 ல் திருத்தங்கலிலும் தேரோட்டம் நடைபெறும்.