Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ... திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா திருத்தங்கல் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு

பதிவு செய்த நாள்

08 ஏப்
2024
07:04

இளையான்குட; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்தாண்டிற்க்கான திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் கடந்த ஏப்.4ம் தேதி அன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.மறுநாள் இரவு நடைபெற்ற மின் அலங்கார தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று முன் தினம் இரவு பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது,இந்நிலையில் நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் இந்தாண்டிற்கான பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்றது.இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததை தொடர்ந்து கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததினால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை,இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar