கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 11:04
நாகை ; கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மஞ்சளாடை அணிந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்ட கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள் அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. சேவாபாரதி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மஞ்சள் ஆடை அணிந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். பின்னர் கோவிலை வந்தடைந்த பக்தர்கள் அங்கு மகா காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.