பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள்.. சிவ பூஜை செய்து வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 12:04
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
ராமேஸ்வரம் கோயிலில் பங்குனி அமாவாசை யொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். மேலும் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனர். அக்னி தீர்த்தத்தில் சிவ பூஜை செய்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.