கோவை ; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடிஸ் வீதியில் இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் பங்குனி கிருத்திகை தினத்தை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் காவிநிற வஸ்திரத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.