பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.29 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2024 10:04
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.29 கோடி கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் ஏப்.8, 12ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இரு நாட்கள் எண்ணிக்கையில் காணிக்கையாக 1.196 கிலோ தங்கம், 21.783 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 5 கோடியே 29 லட்சத்து 34 ஆயிரத்து 887 மற்றும் 717 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று ஏப்.12 எண்ணிக்கையில் காணிக்கையாக 385 கிராம் தங்கம், 6.383 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 742 மற்றும் 214 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.