பத்ராசலம் சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோவிலில் ராமநவமி, திருக்கல்யாண விழா; ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2024 12:04
ஐதராபாத்: பத்ராசலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோவிலில், ராமநவமியான ஏப்ரல் 17ம் தேதி ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் திருக்கல்யாணம் மற்றும் ஏப்ரல் 18ம் தேதி ஸ்ரீராம மகா பட்டாபிஷேகம் மஹோஸ்தவம் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெலுங்கானா அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகல்நேர வெப்பநிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கோதாவரி காட் மற்றும் விஸ்டா வளாகத்தில் இலவச தங்குமிடங்களுடன், கோவிலுக்கு அருகில் நான்கு லட்சம் சதுர அடி பரப்பளவில் பக்தர்கள் வசதிக்காக அதிகாரிகள் மூங்கில் மற்றும் துணியால் செய்யப்பட்ட பந்தல்களை அமைத்துள்ளனர். திருக்கல்யாணம் விழாவை பக்தர்கள் நேரில் காணும் வகையில் தனி எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு ஏர் கூலர் வசதி, இலவச குடிநீர் மற்றும் மோர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் 250 குவிண்டால் தாழம்பூ இலவசமாக வழங்க 60 கவுன்டர்கள், லட்டு பிரசாதம் விற்பனைக்காக 19 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.