பழநி மலைக்கோயிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2024 05:04
பழநி; பழநி மலைக்கோயிலில் குரோதி வருட சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி, முருகன் மலைக்கோயிலில் குரோதி வருட சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பாரவேல் மண்டபம், வெளிபிரகாரத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.