பதிவு செய்த நாள்
19
ஏப்
2024
04:04
காரமடை: சித்திரை சுக்ல பட்ச ஏகாதசியான இன்று காரமடை அரங்கநாதர் சிறப்பு அலங்காராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரமடை ரங்கநாதர் கோவிலில் இன்று (19ம்தேதி) சித்திரை சுக்ல பட்ச ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலையில் பூபால இசை,திருப்பள்ளி எழுச்சி, கோ தரிசனம், கோ பூஜை, மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. கால சந்தி பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரங்கநாதர் உட்பிரகாரத்தை பக்தர்கள் புடைசூழ வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.