சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 11:04
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இங்கு நேற்று காலை 6:00 மணி முதல் ப க்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். மதியம் 12:00 மணி வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலை ஏறினர். ஓடை களில் நீர்வரத்து குறைவாக இருந்த போதிலும், வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டனர். சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் நடந்த சித்ரா பவுர்ணமி வழிபாடு பூஜைகளை நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். அடிவாரத்தில் இருந்து கோயில் வரை பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் வ னத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு ப ஸ்கள் இயக்கப்பட்டன.