கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா; தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 11:04
உளுந்துார்பேட்டை:கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 9ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நேற்று இரவு சுவாமி திருக்கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் ஏராளமான திருநங்கையர் புத்தாடை அணிந்து, பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த ஏராளமான திருநங்கையர் மற்றும் பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். எஸ்.பி., சமய்சிங்மீனா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 25ம் தேதி விடையாற்றி உற்சவம், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.