ரிஷிகேசில் ஜனாதிபதி திரவுபதி முர்மு; கங்கைக்கு தீபாராதனை காட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 01:04
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ரிஷிகேஷ். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷில் பல பழமைவாய்ந்த கோவில்கள் உள்ளன. சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படும் இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கங்கா ஆரத்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று கங்கைக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.