பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
02:04
தேனி; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பக்தர்கள் திரளாக பங்கேற்று திருக்கம்பத்திற்கு தீர்த்தம் ஊற்றுதல், காப்பு கட்டுதலில் ஈடுபட்ட பக் தர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, அம்மன் தரிச னம் செய்து வருகின்றனர். இக்கோயில் சித்தரை திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. இதற் காக ஏப்., 17 ல் கொடிக்கம் பம் நடும் விழா நடந்தது. அதைத் தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் முல்லைப் பெரியாற் றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொடி கம்பத் திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதற் காக அம்மன் தரிசனம் செய்து கைகளில் காப்பு கட்டி வருகின்றனர். நேற்று சித்ரா உள்ளூர் என்பதால் பவுர்ணமி, விடுமுறை பலரும் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அவதி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் போதிய கழிப்பறை வசதி, குடிநீர் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலையில், சித்தரை திருவிழா துவங்கும் முன் வசதிகளை மேம்படுத்தவும், சுகாதாரம் இன்றி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சோதனையிடவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோயில் சித்திரை திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் இருந்தும், தென் மாவட்டங்கள், கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்தும் திரளாக பக்தர்கள் வருகை தருவர். கோயில் கொடி கம்பம் ஊன்றும் விழா ஏப்.,17 ல் கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து பல பக்தர்கள் அங்கபிரதட்சணம், ஆயிரம் கண்விளக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மே 7 ல் திருவிழா துவங்குகிறது. குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் பலர் முல்லைப் பெரியாறு ஆற்றில் குளித்து, சுவாமி தரிசனத்திற்கு செல்கின்றனர். ஆனால் ஆற்றங்கரையில் போதிய அளவில் கழிப்பறைகள், பெண்கள் உடைமாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யவில்லை. சிலர் திறந்த வெளியை பயன்படுத்துவதால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு செல்லும் நிலை உள்ளது. ஆற்றங்கரையில் மொபைல் கழிப்பறைகள், பெண்கள் உடைமாற்றும் அறை அமைத்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பலரும் குடிநீரை கடைகளில் பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இன்றி விற்பனை செய்யப்படுகிறது. உணவுப்பொருட்களும் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பேரூராட்சி, கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சிப்ஸ், அல்வா, பானிபூரி, வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவுகள் சுகாதாரம் இன்றி விற்பனையாகிறது. இதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி கண்டறிய வேண்டும்.