அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் அடுத்த ஜீ.என் கார்டனில் சக்தி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 15 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று 24 ம் தேதி காலை 6:00 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் மாவிளக்கு மற்றும் அம்மனுக்கு சீர் வரிசை ஊர் சுற்றி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 10:00 மணிக்கு பொது பொங்கல் பூஜை, 10:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பூ வோடு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை 25ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா, மாலை அருள் சக்தி மாரியம்மன் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.