காரைக்கால் தங்க மாரியம்மன் கோவிலில் வெள்ளை சாற்று திருவீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 05:04
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் கோவிலில் தீமிதிருவிழாவை முன்னிட்டு அம்மன் வெள்ளை சாற்று திருவீதியுலா நடந்தது.
காரைக்கால் மாவட்ட தலத்தெரு சிவலோகநாதசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ தங்க மாரியம்மன் ஆலய தீமிதிருவிழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி திருவிழா துவக்கியது.தினம் தங்க மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் நேற்று மாரியம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் வெள்ளை சாத்தி வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.வரும் 27ம் தேதி கஞ்சிவார்த்தல்,வரும் 29ம் தேதி தீமிதிருவிழா நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனிஅதிகாரி சரவணன் மற்றும் தீமிதி விழாக்குழுவினர் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.