பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
03:04
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் நேற்று ஸ்ரீபுனிதவதியார் வழிபாட்டு மன்றம் சார்பில் உலகநன்மை வேண்டி மகாயாக பூஜை நடைபெற்றது. கைலாசநாதர் கோவிலில் ஆண்டு தோறும் புனிதவதியார் வழிபாட்டு மன்றம் சார்பில் 40ம் ஆண்டு ஸ்ரீமகாலெஷ்மி, மகாசரஸ்வதி, ஸ்ரீதுர்கா ஆகியவை சிறப்பு மகா யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 25ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் துவக்கியது. இன்று காலை மஹாலஷ்மி, மஹாசரஸ்வதி,துர்கா ஹோமம் நடைபெற்றது.பின் உலகை இயக்கிவரும் துர்கா, லெஷ்மி, சரஸ்வதி என மூன்றாக பிரித்து அருள்பாலித்து வருகிறது. கல்வி, செல்வம்,வீரம் என்பதாகும். அறிவைத்தரும் சரஸ்வதி, பொருளைத்தரும் அதாவது சகல செளபாக்கியங்களையும் தருபவள் மகாலெஷ்மி, வீரத்தையும், தைரியத்தையும் தருபவள் துர்கா இதனால் ஆண்டுதோறும் உலக ஷேமத்தை முன்னிட்டு மக்கள் நலன்கருதி மகா ஹோமம் நடைபெற்றது. மஹாலஷ்மி, சரஸ்வதி தேவியர்க்கு சந்தனகாப்பு அலங்காரமும் தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளான பெண்கள் தங்கள் குடும்பம் நலன் கருதி சிறப்பு யாக பூஜையில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனிதவதியார் வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.