திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட சத்ய யுக சிருஷ்டி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி செப்.,5 காலை 8:30 மணிக்கு ஓம்கார ஜபம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணா ஹூதி நடந்தது. வளாகத்தில் உள்ள முக்தி நிலையத்தில் பத்மாவதி தாயார் சமேத திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் கோவில், ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்., 24ல் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. இன்று காலை யாகசாலை பூஜைகள் முடிவடைந்து புனித நீர் அடங்கிய கலசம் கோயில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. 10.15 மணிக்கு புனிதநீர் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முக்தி நிலைய தலைவர் வசந்த சாய் அம்மா, தலைமை அறங்காவலர் வெங்கட்ராமன், மற்றும் வசந்த சாய் பவுண்டேஷன் கௌரவ அறங்காவலர்கள் செய்திருந்தனர்.