திருப்பூர்; நல்லுார், நொய்யல் ஆற்றின் கரை பேச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 22ம் தேதி, விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. கடந்த 23ம் தேதி பூச்சாட்டு மற்றும் பொரி மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 24ம் தேதி, விநாயகர் பொங்கல் வைத்தல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் ஆகியன நடைபெற்றது. நேற்று முன்தினம், அம்மனுக்கு பொங்கல் வைத்து, முளைப்பாலிகை மற்றும் மாவிளக்கு ஊர்வலம் ஆகியன நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். திரளானோர் கலந்து கொண்டனர். மாரியம்மன் கோவில்
நல்லுார், நொய்யல் கரையில் உள்ள மகா மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களில் பூச்சாட்டு பொங்கல் விழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. அன்று காலை விநாயகர் பொங்கல், இரவு கிராம சாந்தி ஆகியவற்றுடன் விழா துவங்கவுள்ளது. வரும் மே 9ம் தேதி, பொங்கல் விழா மற்றும் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.