திருமலை திருப்பதியில் பாஷ்யகார உற்சவம் மே 3ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 03:04
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் பாஷ்யகார உற்சவம் மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.
ராமானுஜா் விசிஷ்டாத்வைத கோட்பாட்டின் அடிப்படையில் ‘ஸ்ரீபாஷ்யம்’ என்ற விளக்கத்தை எழுதினாா். அதனால் அவா் பாஷ்யகாரா் என்று அழைக்கப்பட்டார். ராமானுஜா் பிறந்த சித்திரை மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருப்பதியில் பாஷ்யகாரா் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவில் 19 நாட்களுக்கு இரு பிரசாதங்களும் வழங்கப்படும். ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திரத்தை முன்னிட்டு மே 12ம் தேதி பாஷ்யகர்லா சாத்துமோரா நடைபெறுகிறது. அன்று மாலை சஹஸ்ரதிபாலங்கர சேவைக்குப் பிறகு, ஸ்ரீ தேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமியும், ராமானுஜரும் கோயில் மாட வீதிகளில் வீதியுலா வருகின்றனர். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சாத்துமோரா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.