பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2024 06:04
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா துவங்கியது.
இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை அடுத்து வசந்தப்பெருவிழா நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கு நேற்று இரவு 7:00 மணிக்கு திருத்தளிநாதர் கோயிலிலிருந்து உற்ஸவ அம்மன் புறப்பாடாகி வெள்ளி ரிஷப வாகனத்தில் பூமாயி அம்மன் கோயிலில் எழுந்தருளினர். அருகில் பூமாயி அம்மன் கோயில் உற்ஸவர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ரமேஷ் குருக்கள் தலைமையில் கொடி மரத்திற்கு பூஜைகள் நடந்தன. முன்னாள் தக்கார் நா. ஆறு. தங்கவேலு பங்கேற்றார். பின்னர் கொடி மரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் காப்புக்கடி வசந்தப் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து உற்ஸவ அம்மன் கோயில் குளத்தை பவனி வந்தார். அம்மன் பவனியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று மாலை 6:00 மணிக்கு அம்மன ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும். தினசரி இரவு 7:30 மணிக்கு அம்மன் திருக்குளம் பவனி வருதல் நடைபெறும். மே3 ல் பாலகுடம், மே5 ல் பொங்கல்விழா, மே7 ல் அம்மன் ரத ஊர்வலமும், மே 8 காலையில் தீர்த்தவாரி, மஞ்சள் நீராட்டு, இரவில் தெப்பமும் நடைபெறும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழாக்குழுவினர் செய்கின்றனர்.