Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மாலை பெயர்ச்சியாகிறார் ...  சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம் சித்திரை திருவோணம்; நடராஜப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

01 மே
2024
05:05

கம்பம்; கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. திரளாக பத்தர்கள் அம்மனை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.

புராதானமும், சிறப்பும் கொண்டது கம்பம் கவுமாரியம்மன் கோயில். தேனி மாவட்டத்தில் சுயம்புவாக அம்மன் எழுந்தருளிய கோயில்களில் இது பிரதானமானது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலிற்கு அடுத்து அதிக பக்தர்கள் வரும் கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் ஏப். 17, ல் நடைபெற்றது. தொடர்ந்து கம்ப ராயப்பெருமாள் கோயிலில் இருந்த உற்சவர், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடத்தி வைத்தனர். . பின்னர் முக்கொம்பு ஊர்வலமாக நகர் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு, கோயிலில் உள்ள கம்பத்தில் இணைத்து கட்டப்பட்டது. புது வஸ்திரம் உடுத்தி மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர் தினமும் அம்மன் விதவித அலங்காரத்துடன் வீதி உலா வருகிறார்.

21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முத்தாய்ப்பு நாளை மே 1 ல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். கம்பம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அக்னிசட்டி எடுத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். வாசகம் பூக்குழி இறங்குகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியும், ஹிந்து சமய அறநிலைய துறையும் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar