பதிவு செய்த நாள்
03
நவ
2012
10:11
புதுச்சேரி: கல்லறை திருநாளையொட்டி, முன்னோர்களது கல்லறையில் கிறிஸ்தவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.உப்பளம், முத்தியால்பேட்டை, ரெட்டியார் பாளையம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள கல்லறைகளில், கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வந்து, தங்களது முன்னோர்களது கல்லறைகளில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உணவுப் பொருட்களை யும் வைத்து படையலிட்டனர்.புதுச்சேரி நகராட்சி சார்பில் ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் அதிகாரிகள், பிரான்சு ஆட்சியில் இறந்த மேயர்களின் கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் குபேர், முன்னாள் மேயர்கள் கொண்டப்பா, தாயூத், ஜோசப்தாயூத், மரிய ரம்மார்ஷல் பியர் ஆகியோர் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லறை திருநாளையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிப்பாடு, சிறப்பு திருப்பலிகள் நடந்தது.