பழநி: பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் நவ.,13 ல் காப்புக்கட்டுதலுடன் துவங்குகிறது. மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடைபெறும். விழாவின் ஆறாம் நாளான நவ.,18 ல் கந்தசஷ்டி அன்று, மலைகோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். சூரசம்ஹாரம் மாலையில் நடைபெறும். ஏழாம் நாளான நவ., 19 ல் மலைகோயில் வெளிப்பிரகாரத்தில் காலை 9.30 க்கு சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்து வருகிறார்.