செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நீதிபதி சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2024 04:05
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நீதிபதி சாமி தரிசனம் செய்தார். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் சாமி தரிசனம் செய்த நீதிபதிக்கு பிரசாதம் வழங்கினர். இதில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, கோவில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் வைகை தமிழ், சக்திராஜன், சுதர்சனம் பாகவதர் உடன் இருந்தனர்.