தஞ்சை கோயில் தொடர்பான சர்ச்சை வீடியோ ; தவறான செய்தி என தொல்லியல் துறை விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2024 04:05
தஞ்சை; தஞ்சை பெருவுடையார் கோயிலின் தரைத்தளங்களை உடைப்பது போன்று சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவிற்கு தொல்லியல் துறை விளக்கம் அளித்துள்ளது.
தஞ்சை பெருவுடையார் கோயிலின் தரைத்தளங்களை உடைப்பது போன்று வீடியோ வெளியிட்டு சமூகவலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. சன்னதியின் பின்புறம் உள்ள தரைத்தளம் மேடு, பள்ளமாக இருப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தொல்லியல் துறை கூறியுள்ளது. மேலும் அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையிலான வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.