கம்பம்: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் "புகார் பெட்டி வைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் 12 ஆயிரம் கோயில்கள் உள்ளன. பழநி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், மதுரை கோயில்கள் முதுநிலைக் கோயில்கள். இக் கோயில்களில் ஏற்கெனவே "புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து கோயில்களிலும் "புகார் பெட்டி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரசாதம், அர்ச்சனை உள்ளிட்ட பல விஷயங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய, புகார் பெட்டி அவசியமாகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.