பக்தர்களுக்காக ராமேஸ்வரம் கோயில் வீதியில் பசுமை பந்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2024 11:05
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப சலனத்தை தணிக்க நகராட்சி நிர்வாகம் பசுமை பந்தல் அமைத்து உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போதைய சுட்டெரிக்கும் வெயிலால் வெப்ப சலனத்தில் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் ரத வீதியில் நடந்து சென்று கோயில் நீராடி தரிசிக்கின்றனர். இதனால் வெப்ப சலனத்தில் பக்தர்கள் அவதிப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி ஏற்பாட்டில் கோயில் கிழக்கு ரத வீதியில் 200 மீ., நீளத்தில் பசுமை பந்தல் அமைத்தனர். இதன்மூலம் கோயிலுக்குள் நீராடி தரிசனம் செய்து திரும்பும் பக்தர்களுக்கு இப்பந்தல் வெப்ப சலனத்தில் இருந்து ஆறுதல் அளிக்கிறது.