செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு மகா புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, விசேஷ ஹோமம், பூர்ணாஹுதியும் நடந்தது. இரவு 11.30 மணிக்கு கலசாபிஷேகம், மகா புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை நடந்தது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கிருஷ்ணதாஸ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.