செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்நாளில்,வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிர ஓரை நேரத்தில், குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்த நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற வாசனை மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, சாம்பிராணி, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைப்பர். ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். லட்சுமி அஷ்டோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம். வேதமந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் ஏழாம்பாடலில், லட்சுமி குபேரனோடு வீற்றிருந்து செல்வவளம் அருள்வது பற்றி கூறுவதைப் படிக்கலாம்.