மழை வேண்டி துவங்கிய வேள்வி; வேள்வியோடு மழையும் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2024 06:05
பல்லடம், ; தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகள் வறண்டு, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு சமூக அமைப்பு சார்பில் மழை வேண்டி யாகம், வர்ண ஜெபம், கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடத்தப்படுகின்றன. அதன்படி பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டையில், மழை வேண்டி சிறப்பு வேள்வி வழிபாடு நடத்த விவசாயிகள் தீர்மானித்திருந்தனர்; இன்று மாலை 5.00 மணிக்கு சிறப்பு வேள்வி வழிபாடு துவங்கும் போது மழையும் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.