கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 10:05
நாகர்கோவில்; கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (14ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 7:30 - க்கு கோயில் தலைமை தந்திரி சஜித் சங்கர நாராயணரு கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10.நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலையிலும் மாலையிலும் அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22-ல் ஒன்பதாம் நாள் விழாவில் காலை 9:30க்கு தேரோட்டம் நடைபெறும். 10ம் நாள் விழாவில் அதிகாலை 5:30 க்கு கோயிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. கொடியேற்றத்துக்கான கயிறை கன்னியாகுமரி மீனவ சமுதாயம் சார்பில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத் திருந்தனர்.