Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி பொறந்தாச்சு; விஷ்ணுபதி ... பிரதோஷம்; சிவன், நந்தீஸ்வரரை வழிபட நல்லதே நடக்கும் பிரதோஷம்; சிவன், நந்தீஸ்வரரை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
இன்று வளர்பிறை அஷ்டமி; சங்கடம் தீர்ப்பார் கால பைரவர்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று வளர்பிறை அஷ்டமி; சங்கடம் தீர்ப்பார் கால பைரவர்..!

பதிவு செய்த நாள்

15 மே
2024
10:05

சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம் கால பைரவர். பைரவருக்கு செவ்வரளி சாற்றி வழிபட மனக்குழப்பம், கடன்பிரச்னை நீங்கும். இன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட பொன்னும் பொருளும் சேரும். வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட வரும் துன்பம் யாவும் நீங்கும். போகம், யோகம், வேகம் என சிவபெருமானுக்கு மூன்று வடிவம் உண்டு. இதில் தீயசக்திகளை அழிக்கும் வேக வடிவம் காலபைரவர். இவரை வழிபட செய்வினை, திருஷ்டி, கடன், எதிரி தொல்லை தீரும்.

சிவபெருமானின் பலவிதமான கோலங்களில் ஒன்று பைரவர்.  இவரது 64 வடிவங்களில் கால பைரவர் சிறப்பு மிக்கவர். பக்தர்கள் விரும்பும் வரத்தை சரியான காலத்தில் அருள்பவர் இவர். நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர். இக்கட்டான சூழ்நிலையில் இவரை சரணடைந்தால் நிச்சயம் கரை சேர்ப்பார். தீராக் கடன், குடும்ப பிரச்னை, குழந்தையின்மை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து நம்மை விடுவிப்பவர் கால பைரவ மூர்த்தி. காசியின் காவல் தெய்வமான இவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன.  

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar