பதிவு செய்த நாள்
06
நவ
2012
10:11
கும்பகோணம்: திருவிடைமருதூர் மீனாட்சி சொக்கநாதர்கோவிலில், 9ம் ஆண்டு ஐப்பசி மாத கார்த்திகை விழா நடந்தது.கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இங்கு கந்தவேள் வழிபாட்டு மன்றம் சார்பில், 9ம் ஆண்டு ஐப்பசி மாத கார்த்திகை விழா நடந்தது. திருமுறைசேவாமணி அனந்தசுப்ரமணியமும், அவரது குழுவினரும் திருப்புகழ் பாமாலை பாடினர். செயலாளர் கோபாலன் தலைமையில், மன்ற தலைவர் பேராசிரியர் பொன்.முத்தையன் திருப்புகழ் பற்றி சொற்பொழிவாற்றினார். அரிசி ஆலை உரிமையாளர் சீனிவாசன் தம்பதியர் அன்னதானம் செய்தனர். கார்த்தி, ரமணி ஆகியோர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து, பிரசாதங்கள் வழங்கினர். விழாவில் வாசுதேவன், சிவா, சீனிவாசன் தம்பதியர், குருசாமி தம்பதியர், பாலமுருகன், கருணாகடாட்சம், நாராயணன், போட்டோ அய்யப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.