சபரிமலை பம்பையில் வாகனங்களை நிறுத்தலாம்; கேரள நீதிமன்றம் அனுமதி.. பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2024 03:05
சபரிமலை; சபரிமலை பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் கனரக வாகனங்கள் நிலக்கல்லில்தான் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் வந்து ஊர் திரும்ப வேண்டும். இதற்கு பக்தர்கள் பம்பையில் பார்க்கிங் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. அதில் பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கனரக வாகனங்கள் நிலக்கல்லில் தான் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் கழித்து பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கான தடை நீக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.