Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் சத்குரு சதாசிவ ... வைகாசி உற்சவம் : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் உலா வைகாசி உற்சவம் : ராமேஸ்வரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகாண்ட் கார்த்திக் சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்; தமிழக ஆதீனங்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
உத்தரகாண்ட் கார்த்திக் சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்; தமிழக ஆதீனங்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 மே
2024
10:05

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் இரண்டாவது முறையாக 108 சங்காபிஷேகம் தமிழக ஆதீனங்கள் தலைமையில் நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்று பக்தர்கள் கரகோஷம் எழுப்பினர்.

உத்தரகாண்ட் மாநிலம் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தவும் ஆன்மீக பகுதிகளை அனைத்து மாநில மக்கள் கண்டு தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ருத்ர பிரியக் மாவட்டத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி மலையில் உள்ள கார்த்திக் சுவாமி ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் இரண்டாவது முறையாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து ஏராளமான முருக பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டனர்.  அனைவருக்கும் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.5 கி.மீ உயரத்தில் மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலுக்கு அனைவரையும் நடைபாதை மூலம் கிராம மக்கள் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் இளைப்பாருவதற்கு மண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றுளா துறை  சார்பில் செல்லும் வழியில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு தண்ணீர், பழங்கள் வழங்கப்பட்டு மலை மீது  அழைத்துச்சென்றனர்.

உத்தரகாண்ட் மாநில முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் விமான போக்குவரத்து துறை மற்றும் நிதித்துறை கூடுதல் செயலாளர் ரவிசங்கர் ஐஏஎஸ் தலைமையில் அவிநாசி ஆரூர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 10க்கும் மேற்பட்ட வேத மந்திரம் முழங்க 108சங்கு அபிஷேகம் தமிழக ஆதீனங்கள் மயிலம் ஆதீனம். கௌமாரம் மடாலயம் குமரகுரு சுவாமிகள் கூனம்பட்டி ஆதீனங்கள் முன்னிலையில் கார்த்திக் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அபிஷேக ஊர்வலமாக கோயிலை சுற்றி சிவாச்சாரியார்களின் தலைமையில், செயலர் ரவிசங்கர் உடன் ஏராளமான பக்தர்கள் மற்றும் மடாதிபதிகளும் வலம் வந்து சிறப்பித்தனர். இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்று பக்தி பரவசம் எழுப்பினர். விழாவினை மேலும் சிறப்பிக்க அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையில் கோயிலுக்கு மேள தாளங்கள் முழங்க வருகை தந்தனர். தமிழகத்திலுள்ள அறுபடை முருகன் கோயிலில் இருந்து அங்கவஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டு கார்த்திக் சுவாமி மீது சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த முருகன் கோயில் சிவாச்சாரியருக்கு சுற்றுலா துறைசார்பில் நிதித்துறை செயலர் ரவிசங்கர் மரியாதை செய்தார். விழாவில் பிரதமர் ஆலோசகர் பாஸ்கர்குல்பே, ஜோதிடர் ராஜகோபால், சுற்றுலாத்துறை இயக்குனர் ஸ்மித் பன்ச், ஆன்மிகம் மற்றும் சமூக ஆர்வலர் செல்ல பாண்டியன் சுற்றுலா வழிகாட்டி முரளி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள அறுபடைவீடு முருகன் ஆலயங்களில் சிவாச்சாரியார் சிருங்கேர்மடம் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் வீணை ராஜேஸ் வைத்யா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar