சார் தாம் யாத்திரை; கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 12:05
உத்தரகாசி; உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்வது, சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த யாத்திரை துவங்கியுள்ளதை அடுத்து, யமுனோத்ரியில் தரிசனத்துக்காக பக்தர்கள் குவிந்துள்ளனர்.
புகழ்பெற்ற சார் தாம் யாத்திரை இந்தாண்டு கடந்த 10ம் தேதி துவங்கியது. யாத்திரை துவங்கிய நாள் முதல் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் குவந்து வருகின்றனர். பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.