தென் திருப்பதியில் மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 01:05
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணய உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி அளித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வைனவ திருத்தமான தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது. இங்கு ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணய உற்சவத்தை முன்னிட்டு நேற்று முதல் வரும் 19ம் தேதி வரை ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதம், அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம்,ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணய உற்சவம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக மழை வேண்டி சிறப்பு பூஜைகள் கடந்த 3ம் தேதி நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்திருமலை திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம் அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.