காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத மந்திரம் முழங்க நடைபெற்ற விழாவில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் உலா வருகிறார். இதில், மூன்றாம் நாள் உற்சவமான மே 22ம் தேதி, கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான மே 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.