கோவை; கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஆஞ்சநேயர், மகாலட்சுமி நாராயணன் ஆகிய சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்தனர்.