பதிவு செய்த நாள்
20
மே
2024
12:05
திருமலை மூன்று நாட்கள் நடைபெற்று வந்த பத்மாவதி பரிணயோத்சவம் நேற்று நிறைவடைந்தது.
திருமலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் உள்ள பரிணயோத்ஸவ மண்டபத்திற்கு ஸ்ரீதேவியும், பூதேவியும் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். கடைசி நாளில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வலம் வந்தார். சுவாமிக்கு
சதுர்வேத பாராயணம், அதைத் தொடர்ந்து பைரவி, நளினகாந்தி, சங்கரபிரான், ஹிந்துஸ்தானி, கரஹரப்ரியா, நீலாம்பரி ராகங்கள் நாதஸ்வரம், மேளம், தமருக வைத்யம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ ரகுராம கிருஷ்ணா மற்றும் குழுவினர் அன்னமாச்சார்ய சங்கீர்த்தனங்களான வெங்கடாசல நிலையம், தண்டனனா அஹி, தாசனா மதிகோ என்னா போன்ற தாச படகலு, புல்லாங்குழல், வீணை, தபேலா உள்ளிட்ட வாத்தியங்களில் பாக்யதா லக்ஷ்மி பாரம்மா போன்ற இசைக்கருவிகளை பக்தி சங்கீர்த்தனங்களில் மெய்சிலிர்க்க வைத்தனர். விழாவில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் AV தர்மா ரெட்டி, ஜெகதீஸ்வர் ரெட்டி, லோகநாதம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.