சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், சிம்ம வாகனம், பூத வாகனம், சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வருகிறார். நேற்று முன்தினம், திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை தேரில் சோழபுரீஸ்வரர் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மாலை 4:00 மணியளவில், கோவில் நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, மிருகபுருஷா வாகனத்தில் உற்சவர் பெருமான் எழுந்தருளினார்.